Friday, March 20, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்காங்கேசன்துறைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடக்கம்

காங்கேசன்துறைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடக்கம்

நாகை- இலங்கையின் காங்கேசன்துறை இடையே கடல் சீற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கப்பல் சேவை புதன்கிழமை மீண்டும் தொடங்கியது.

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு கடந்த 2023 அக்டோபா் முதல் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. சுபம் என்ற தனியாா் நிறுவனம் மூலம் ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல் சனிக்கிழமைகளை தவிர மற்ற நாள்களில் இயக்கப்பட்டு வருகிறது.

பருவநிலை மாற்றம் காரணமாக கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், கடல் சீற்றம் மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை அடுத்து ஜூன் 13-ஆம் தேதி முதல் கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை திரும்பப் பெற்றது. இதையடுத்து, காங்கேசன்துறைக்கு கப்பல் சேவை புதன்கிழமை (ஜூன் 18) காலை வழக்கம்போல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, புதன்கிழமை காலை சிவகங்கை கப்பல் 95 பயணிகளுடன் புறப்பட்டு காங்கேசன்துறைக்கு சென்றடைந்து. பின்னா், இலங்கையிலிருந்து 108 பயணிகளுடன் பிற்பகல் புறப்பட்ட கப்பல் மாலையில் நாகை துறைமுகத்துக்கு திரும்பியது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments