Monday, July 27, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனேடிய மாகாணமொன்றில் 12 நாட்களில் 12 விபத்துகள்: பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை!

கனேடிய மாகாணமொன்றில் 12 நாட்களில் 12 விபத்துகள்: பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை!

கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில் 12 நாட்களில் நிகழ்ந்த 12 விபத்துகளில் 17 பேர் பலியாகியுள்ளதாக கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில், ஜூலை மாதம் 10ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையிலான 12 நாட்களில், 12 விபத்துகள் தொடர்பில் தங்களுக்கு அழைப்புகள் வந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அந்த 12 விபத்துகளில், 17 பேர் பலியாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

விடயம் என்னவென்றால், அந்த விபத்துகளில் பாதிக்கு, மது அல்லது போதைப்பொருள் அருந்திய சாரதிகளே காரணம்!

மது அருந்திவிட்டு போதையில் வாகனம் ஓட்டிய சாரதி ஒருவர் ஏற்படுத்திய விபத்தில் தன் 17 வயது மகனான க்வினை இழந்தார் போனி ஸ்டீவென்சன் என்னும் பெண்.

யாராவது மது அருந்திவிட்டு போதையில் வாகனம் ஓட்டுவதைக் கண்டால், மக்கள் அவசர உதவியை அழைக்கவேண்டும் என்று கூறும் போனி, நாங்கள் எங்கள் மகனை இழந்துவிட்டோம்.

ஆனால், ஒரு குடும்பத்தில் இப்படி ஒரு இழப்பு ஏற்படுவதால் என்ன நடக்கும் என்பதை, விபத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எப்படி புரியவைப்பது என்று எனக்குத் தெரியவில்லை என்கிறார் அவர்.

இந்நிலையில், சாலையில் வாகனம் ஓட்டும் சாரதிகள், பாதுகாப்பு தொடர்பில் சரியான முடிவெடுக்கும்படி பொலிசார் வலியுறுத்தியுள்ளார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments