கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், லாங்லி பகுதியைச் சேர்ந்த டேல் என்ற நபர், பல ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரே வரிசை எண்களைப் பயன்படுத்தி லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார்.
குடும்பத்தினரின் பிறந்தநாள் தேதிகளை ஒருங்கிணைத்து அவர் உருவாக்கிய பிரத்யேக எண் வரிசைக்கு தற்போது மாபெரும் பலன் கிடைத்துள்ளது.
லாங்லியில் உள்ள டக்ளஸ் பார்க் மார்க்கெட்டில் வாங்கப்பட்ட லாட்டோ 6/49 குலுக்கல் சீட்டை, அதிகாரப்பூர்வ செயலி வாயிலாக டேல் சரிபார்த்தபோது, தமக்கு ஒரு மில்லியன் டாலர் உறுதி செய்யப்பட்ட பரிசு கிடைத்துள்ளதை அறிந்து வியப்படைந்தார். இந்தத் தொகையைக் கொண்டு ஆடம்பரமாகக் கொண்டாடுவதை விட, தன் குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்கும் படிப்புச் செலவுகளுக்கும் உறுதுணையாக இருப்பதே தமது முதன்மை நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இங்கிலாந்து நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களையும் அருங்காட்சியகங்களையும் பார்வையிட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.


