Tuesday, September 29, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடா மருத்துவமனைகளில் திருடியதாக பெண்ணுக்கு குற்றச்சாட்டு

கனடா மருத்துவமனைகளில் திருடியதாக பெண்ணுக்கு குற்றச்சாட்டு

Woman charged with stealing from patients and staff at different hospitals: கனேடிய மாகாணமொன்றில் பல்வேறு மருத்துவமனைகளில் திருடியதாக பெண்ணொருவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் திருடியதாக பெண்ணொருவர் மீது 65 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஒன்ராறியோவிலுள்ள பல மருத்துவமனைகளில், நோயாளிகள் மற்றும் ஊழியர்களிடமிருந்து பல்வேறு பொருட்கள் திருட்டுப்போவது குறித்து பொலிசாருக்கு பல புகார்கள் வந்துள்ளன.

இந்நிலையில், Orillia Soldiers’ Memorial Hospital என்னும் மருத்துவமனையில் நிகழ்ந்த ஒரு திருட்டு தொடர்பில், அங்கு வேலை செய்யும் பர்லிங்டனைச் சேர்ந்த நஸீம் (Nassim Eronn, 34) என்னும் பெண்ணிடம் பொலிசார் விசாரணை நடத்தியுள்ளார்கள்.

அப்போது, அந்தப் பெண் அந்த மருத்துவமனையில் மட்டுமல்ல, ஒன்ராறியோவிலுள்ள பல மருத்துவமனைகளில், நோயாளிகள் மற்றும் ஊழியர்களிடமிருந்து திருடியது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து அவரது வீட்டை பொலிசார் சோதனையிட, அங்கு அவர் திருடிய எக்கசக்கமான பொருட்கள் இருப்பது தெரியவரவே, அவற்றை பொலிசார் பறிமுதல் செய்துள்ளார்கள்.

நஸீம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது 65 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments