Wednesday, March 18, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்கனடா ஓபன் டென்னிஸ் கரேன் கச்சனோவ் இறுதிப்போட்டிக்கு தகுதி

கனடா ஓபன் டென்னிஸ் கரேன் கச்சனோவ் இறுதிப்போட்டிக்கு தகுதி

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் கரேன் கச்சனோவ் (ரஷியா) – அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மனி) மோதினர்.

இதில் முதல் இரு செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை கரேன் கச்சனோவ் கைப்பற்றினார். கச்சனோவ் இந்த ஆட்டத்தில் 6-3, 4-6 மற்றும் 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளார்.

இறுதிப்போட்டியில் பென் ஷெல்டான் – கச்சனோவ் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments