Saturday, October 24, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் 46 மில்லியன் டாலர் லாட்டரி வென்ற நபர்

கனடாவில் 46 மில்லியன் டாலர் லாட்டரி வென்ற நபர்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், குவெஸ்னல் பகுதியைச் சேர்ந்த ரிச்சர்ட் என்பவர் லோட்டோ 6/49 குலுக்கலில் 46 மில்லியன் டாலர் மதிப்பிலான ‘கோல்ட் பால் ஜாக்பாட்’ பரிசை வென்று சாதனை படைத்துள்ளார்.

2025 டிசம்பர் 20 அன்று நடைபெற்ற இக்குலுக்கலில், தனது சொந்த ஊரில் விற்கப்பட்ட ஒரு டிக்கெட்டுக்கு பெரும் பரிசு கிடைத்துள்ளதாக அறிந்த ரிச்சர்ட், உடனடியாக தனது டிக்கெட்டைச் சரிபார்த்துள்ளார்.

குவெஸ்னலில் உள்ள பில்லி பார்கர் கேசினோவில் இந்த அதிர்ஷ்டச் சீட்டை அவர் வாங்கியிருந்தார்.

பிரிட்டிஷ் கொலம்பியா லாட்டரி கழகத்தின் இணையதளத்தில் சரிபார்த்தபோது, கனடா முழுவதிலும் இருந்து தமக்கு மட்டுமே இந்த 46 மில்லியன் டாலர் பரிசு கிடைத்துள்ளது என்பதை அறிந்து திகைத்துப் போனதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மகிழ்ச்சியான செய்தியை முதலில் தனது மனைவியுடன் பகிர்ந்துகொண்டதாகவும், அப்போது இருவரும் ஆனந்தக் கண்ணீர் வடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

பரிசுத் தொகையைக் கொண்டு எகிப்தில் உள்ள பிரமிடுகளை நேரில் காண வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்றும், மன அழுத்தமற்ற பயணங்களை மேற்கொள்ள உள்ளதாகவும் ரிச்சர்ட் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம், வாழ்க்கையை மிக எளிமையாகவே தொடர்ந்து வாழ விரும்புவதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதேபோன்று, பிரிட்டிஷ் கொலம்பியாவின் லாங்லி பகுதியைச் சேர்ந்த டேல் என்பவர் 2026 செப்டம்பர் 30 குலுக்கலில் குடும்பத்தினரின் பிறந்தநாள் எண்களைப் பயன்படுத்தி ஒரு மில்லியன் டாலர் உறுதி செய்யப்பட்ட பரிசை வென்றுள்ளார்.

இப்பணத்தைக் கொண்டு தனது பிள்ளைகளின் எதிர்காலச் செலவுகளுக்கு உதவப் போவதாக அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments