Friday, November 20, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் வீடு புகுந்து கொள்ளையிட முயன்ற 13 வயதுச் சிறுவன் கைது!

கனடாவில் வீடு புகுந்து கொள்ளையிட முயன்ற 13 வயதுச் சிறுவன் கைது!

கனடாவின் டொரொன்டோ – ஸ்கார்பரோ பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து, வீட்டு உரிமையாளரைக் கத்தியால் தாக்க முயன்றதுடன், பொருட்களைத் திருடித் தப்பிச் சென்ற 13 வயதுச் சிறுவன் ஒருவரை டொரொன்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த நவம்பர் 17 பிற்பகல் 1:30 மணியளவில், கிங்ஸ்டன் வீதி மற்றும் டான்ஃபோர்த் அவென்யூ ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட இடத்தில் வீடொன்றில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குறித்த சிறுவன், அங்கிருந்த தனிப்பட்ட பொருட்களைத் திருடிக்கொண்டிருந்த போது வீட்டு உரிமையாளர் அதனைக் கண்டு எதிர்த்துள்ளார்.

இதன்போது, அச்சிறுவன் வீட்டு உரிமையாளரைக் கத்தியால் தாக்க முயன்றதுடன், தீங்கு விளைவிக்கக்கூடிய இரசாயனப் பதார்த்தம் ஒன்றைப் பயன்படுத்தப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளதாகப் பொலிஸாரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், அங்கிருந்து தப்பிச் செல்லும்போது தன்னிடமிருந்த குறித்த பதார்த்தத்தைக் கீழே ஊற்றிவிட்டு அச்சிறுவன் தப்பியோடியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சிறிது நேரத்திலேயே சந்தேக நபரான சிறுவனைக் கண்டறிந்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட போது அவனிடமிருந்து பல கத்திகள் மற்றும் திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவனுக்கு எதிராகப் பின்வரும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன: இக்குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பதுடன், கனடாவின் இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சிறுவனின் அடையாளம் வெளியிடப்படவில்லை.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments