Tuesday, November 3, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் இணையவழிச் சூதாட்டம் – தற்கொலைகள் மும்மடங்கு அதிகரிப்பு!

கனடாவில் இணையவழிச் சூதாட்டம் – தற்கொலைகள் மும்மடங்கு அதிகரிப்பு!

கனடாவில் இணையவழிச் சூதாட்டத்திற்கு அடிமையாகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த பத்தாண்டுகளில் குறைந்தது 220 பேர் சூதாட்ட அடிமைத்தனத்துடன் தொடர்புடைய தற்கொலைகளால் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக, 2022ஆம் ஆண்டு முதல் ஒன்ராறியோவில் சூதாட்டம் தொடர்பான தற்கொலைகள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளன.

சூதாட்டத்தில் ஈடுபடுவோரைத் தொடர்ந்து விளையாடத் தூண்டும் வகையில் நிறுவனங்கள் போனஸ் சலுகைகள் மற்றும் விளம்பரங்களை வழங்குவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், கனடாவில் சூதாட்டம் தொடர்பான தற்கொலைகளை முறையாகக் கண்காணிக்கும் தேசிய நடைமுறை இல்லாததால், உண்மையான உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இணையவழிச் சூதாட்ட விளம்பரங்களைக் கட்டுப்படுத்தவும், அடிமைத்தனத்தால் பாதிக்கப்படுவோருக்கு உரிய சிகிச்சை மற்றும் ஆதரவு வழங்கவும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments