Sunday, March 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மதுபான போத்தல்கள், ஏலக்காய் தொகை கைப்பற்றல்!

கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மதுபான போத்தல்கள், ஏலக்காய் தொகை கைப்பற்றல்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 673 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் 75 கிலோ ஏலக்காய் தொகை என்பன விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (13) அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த பெறுமதி 5 கோடியே 50 இலட்சம் ரூபாய் என விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பயணி ஒருவர் இந்த பொருட்களை விமான நிலையத்தில் விட்டுச் சென்றிருக்கலாம் என விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments