Friday, August 28, 2026
spot_img
Homeஉலக செய்திகள்உசைன் போல்ட் பதிவு செய்த சாதனையை முறியடித்த மனித உருவ ரோபோ

உசைன் போல்ட் பதிவு செய்த சாதனையை முறியடித்த மனித உருவ ரோபோ

சீனாவின் பீஜிங்கில் நடைபெற்ற உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டியில், சீனாவின் மனித உருவ ரோபோ தியான் ஜியாவ் (Tian Jiao) தொடர்ந்து இரண்டாவது நாளாக 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற போட்டியின் இறுதி நாளில், தியான் ஜியாவ் 8.64 விநாடிகளில் 100 மீற்றர் தூரத்தை கடந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இது, 2009ஆம் ஆண்டு பேர்லினில் உசைன் போல்ட் பதிவு செய்த 9.58 விநாடிகள் என்ற மனிதர்களுக்கான உலக சாதனையை விட கிட்டத்தட்ட ஒரு விநாடி வேகமானதாகும்.

இதற்கு முன்னதாக அரையிறுதிப் போட்டியில் தியான் ஜியாவ் 8.86 விநாடிகளில் 100 மீற்றர் ஓட்டத்தை நிறைவு செய்து சாதனை படைத்திருந்தது.

எனினும், இறுதிப் போட்டியில் தனது முந்தைய நேரத்தை விட 0.22 விநாடிகள் குறைத்து, 8.64 விநாடிகளில் ஓடி தனது சாதனையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது தியான் ஜியாவ் மனித உருவ ரோபோ.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments