Wednesday, March 11, 2026
spot_img
Homeஉலக செய்திகள்உக்ரைன் விவகாரம்: அமெரிக்க பிரதிநிதிகளுடன் ரஷிய அமைச்சர் பேச்சுவார்த்தை

உக்ரைன் விவகாரம்: அமெரிக்க பிரதிநிதிகளுடன் ரஷிய அமைச்சர் பேச்சுவார்த்தை

ரஷியாவின் வெளியுறவு விவகாரங்களுக்கான அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் அமெரிக்க அதிகாரிகளுடன் சவுதி அரேபியாவின் ரியாத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதற்காக அவர் இன்று அதிகாலை ரியாத் சென்றடைந்தார். உக்ரைன் விவகாரம் இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய விவாதமாக இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ரஷிய அதிபர் புதினும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தொலைபேசி வழியாக உரையாடினர். அப்போது உக்ரைனில் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர ரஷியாவுக்கு அமெரிக்க தரப்பு வலியுறுத்தியதைத் தொடர்ந்து, இதனை புதின் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். இத்தகைய சூழலில் தான் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments