Friday, September 11, 2026
spot_img
Homeஉலக செய்திகள்ஈரான்,பாகிஸ்தான் இடையே ஹவுதி தாக்குதல்கள் குறித்து பேச்சு

ஈரான்,பாகிஸ்தான் இடையே ஹவுதி தாக்குதல்கள் குறித்து பேச்சு

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி அசிம் முனீர் ஆகியோர் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதன்போது, ஈரான்–அமெரிக்கா இடையிலான மோதலை தணித்து, மீண்டும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரான் மீதான அமெரிக்க–இஸ்ரேல் போர், பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கும் சாத்தியம் மற்றும் சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொள்ளும் தாக்குதல்கள் குறித்தும் இருவரும் விவாதித்துள்ளனர்.

இதேவேளை, யேமனின் செங்கடல் கடற்கரையின் எஞ்சிய பகுதிகளையும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாகவும், இதன் மூலம் முழு செங்கடல் கடற்கரையும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும் முன்னதாக தகவல் வெளியாகியிருந்தது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments