Tuesday, October 27, 2026
spot_img
Homeஉலக செய்திகள்இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா விசாரணை ஆணையம் அதிரடி குற்றச்சாட்டு

இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா விசாரணை ஆணையம் அதிரடி குற்றச்சாட்டு

காசாவில் பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஐ.நாவின் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

2025 செப்டம்பர் 16 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், பலஸ்தீன மக்களைக் கொலை செய்தல், கடுமையான உடல் மற்றும் மனப் பாதிப்புகளை ஏற்படுத்துதல், உயிர்வாழ்வதற்கான சூழல்களை அழித்தல் உள்ளிட்ட செயல்கள் இனப்படுகொலைக்கான வரையறைக்குள் வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், இத்தகைய குற்றங்களைத் தடுக்கவும், பொறுப்பானவர்களைத் தண்டிக்கவும் இஸ்ரேல் தவறியுள்ளதாகக் குறிப்பிட்ட ஆணையம், சர்வதேச சட்டத்தின்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments