Tuesday, August 18, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இலங்கை சுற்றுலா அதிகாரசபைக்கு புதிய தலைவர்

இலங்கை சுற்றுலா அதிகாரசபைக்கு புதிய தலைவர்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) புதிய தலைவராக சுரன்ஜித் வேவிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவராகப் பணியாற்றிய புத்திக ஹேவாவசம் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை காரணங்களினால் நேற்று (17) தனது பதவியை இராஜினாமா செய்ததால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை சுற்றுலா, வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரிடம் எழுத்து மூலம் சமர்ப்பித்திருந்தார்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்

இந்நிலையில் ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராகவும் செயற்படும் இவர், வங்கியியல் துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் 20 வருடங்களுக்கும் மேலான சேவை அனுபவத்தைக் கொண்டவரான சுரன்ஜித் வேவிட்ட இந்த பதவியை பொறுப்பேற்றுள்ளார்.

கேகாலை புனித மரியாள் கல்லூரியின் பழைய மாணவரான சுரன்ஜித் வேவிட்ட, உரிமம் பெற்ற சுற்றுலா வழிகாட்டி விரிவுரையாளர் உட்பட பல துறைகளில் அனுபவம் வாய்ந்த ஒருவராவார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments