Friday, November 6, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இலங்கை - இந்திய கிரிக்கெட் தொடர்: டில்லியிலிருந்து விசாகப்பட்டினத்திற்கு மாற்றம்

இலங்கை – இந்திய கிரிக்கெட் தொடர்: டில்லியிலிருந்து விசாகப்பட்டினத்திற்கு மாற்றம்

இலங்கை கிரிக்கெட் அணியின் இந்தியச் சுற்றுப்பயணத்தில் இடம்பெறவிருந்த முதலாவது ஒருநாள் போட்டியின் மைதானத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள இத்தொடரில், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு – 20 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதன்படி, திட்டமிடப்பட்ட அட்டவணைப்படி முதலாவது ஒருநாள் போட்டி டிசம்பர் 13ஆம் திகதி டில்லியில் நடத்தப்படுவதாக இருந்தது.

எனினும், அப்பகுதியில் நிலவக்கூடிய கடுமையான வளிமாசடைவு மற்றும் டெல்லி மைதானத்தில் முன்னெடுக்கப்படவுள்ள புனரமைப்புப் பணிகள் என்பவற்றை கருத்திற்கொண்டு, போட்டியை வேறு இடத்திற்கு மாற்றுமாறு டில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் (DDCA) உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்திருந்தது.

இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கிரிக்கெட் வாரியம், குறித்த முதலாவது ஒருநாள் போட்டியை டில்லியிலிருந்து விசாகப்பட்டினத்திற்கு மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments