தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவி வரும் டிட்வா புயல் இலங்கையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை முழுவதும் பெய்து வரும் தொடர் கனமழையால் பல்வேறு மாகாணங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள இந்தியர்களுக்கு உதவ, கொழும்பு பண்டாரநாயக்கே சர்வதேச விமான நிலையத்தில் இந்திய தூதரகம், அவசர உதவி மையத்தை அமைத்துள்ளது. அவசர உதவி எண் அறிவிப்புவிமான நிலையத்திலோ அல்லது இலங்கையில் எப்பகுதியிலும் சிக்கலை
எதிர்கொள்ளும் இந்தியர்கள் +94773727832 என்ற அவசர உதவி எண்ணைத் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணை வாட்ஸ்ஆப் மூலமாகவும் தொடர்புகொள்ளலாம். உதவி மையத்தை நேரடியாகவும் அணுகலாம் .கொழும்பு விமான நிலையத்தில் உள்ள இந்திய உதவி மையத்தில் பயணிகளுக்குத் தேவையான உணவு, குடிநீர் வசதி்களும் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


