Thursday, March 19, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்ட பாதாள உலக கும்பலை இலங்கைக்கு அழைத்து வர விசேட பொலிஸ் குழு!

இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்ட பாதாள உலக கும்பலை இலங்கைக்கு அழைத்து வர விசேட பொலிஸ் குழு!

இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்ட பாதாள உலக கும்பலை நாளை ஞாயிற்றுக்கிழமை (31) இலங்கைக்கு அழைத்து வருவதற்காக விசேட பொலிஸ் குழு ஒன்று இந்தோனேசியாவுக்கு இன்று சனிக்கிழமை (30) சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கெஹெல்பத்தார பத்மே’, ‘கொமாண்டோ சலிந்த’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் கைதுசெய்யப்பட்டது.

கைதுசெய்யப்பட்வர்களில் ஒருவரான பக்கோ சமனின் மனைவி மற்றும் மகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை (29) மாலை அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட பக்கோ சமனின் மனைவி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.

ஏனைய 5 பேரையும் நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments