Wednesday, March 18, 2026
spot_img
Homeஉலக செய்திகள்இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – டொனால்டு டிரம்ப்

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். பதவியேற்ற உடன் அவர் பல்வேறு நாடுகள் மீது இறக்குமதி வரியை அதிகரித்தார். அதன்பின்னர், சீனாவுடன் ஏற்பட்ட வர்த்தக மோதலை தொடர்ந்து அந்த வரியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். அதேவேளை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் அதிக வரி விதித்துள்ளார். இந்த வரிகளை தளர்த்த இந்தியா – அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், சீனாவுடன் நாம் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். அனைத்து நாட்டுடனும் தாம் வர்த்தக ஒப்பந்தம் செய்யப்போவதில்லை. ஆனால், நமக்கு சிறந்த ஒப்பந்தங்கள் வர உள்ளன. இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகலாம்’ என்றார்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments