Monday, June 29, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இந்தியாவின் வெற்றிப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அயர்லாந்து

இந்தியாவின் வெற்றிப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அயர்லாந்து

இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரை அயர்லாந்து அணி 2-0 என கைப்பற்றியுள்ளது.

நேற்று (28) இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் 155 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்று 1 ஓட்டத்தால் தோல்வியடைந்தது.

இதற்கமைய 2 போட்டிகளைக் கொண்ட இந்த இருபதுக்கு 20 தொடரை அயர்லாந்து அணி 2 -0 என்ற அடிப்படையில் முழுமையாக கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதன்மூலம், இந்திய அணி, 2023 ஆம் ஆண்டின் பின்னர் சர்வதேச போட்டிகளில் தொடர்ச்சியாக 15 தொடர்களைக் கைப்பற்றி இருந்த நிலையில், இந்திய அணியின் சாதனைப் பயணத்திற்கு அயர்லாந்து அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments