Wednesday, March 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஆளுநர் அற்ப பதவிக்காக தமிழ் மக்களை அடகு வைக்க வேண்டாம் என பொது மக்கள் கோரிக்கை

ஆளுநர் அற்ப பதவிக்காக தமிழ் மக்களை அடகு வைக்க வேண்டாம் என பொது மக்கள் கோரிக்கை

சட்டவிரோத தையிட்டி விகாரையை வட மாகாண ஆளுநர் தனது அற்ப பதவிக்காக தமிழ் மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் அடகு வைக்க வேண்டாம் என தமிழ் தேசிய மக்கள் கட்சியின் ஆதரவாளர்கள் தையிட்டியில் கூடிநின்ற போது தெரிவித்துள்ளனர்..

இன்று புதன்கிழமை வலி வடக்கு தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ விகாரையை அகற்றுமாறு இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், வட மாகாண ஆளுநர் தனது பதவியை தக்க வைப்பதற்கும் எதிர்காலத்தில் பதவிகளை எதிர்பார்ப்பதற்கும் தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக்கூடாது என்பதில் அக்கறையாக உள்ளார்.

அதேபோல் அரசியல் கோமாளி ஒருவரும் தையிட்டி விகாரையை அகற்றக்கூடாது என கூறி வருவது திட்டமிட்ட அரச முகவர்களாக இவர்கள் செயற்படுகிறார்கள்.

தையிட்டி சட்டவிரோத விகாரை போராட்டத்தை கொச்சைப் படுத்தியவர்கள் 12ம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற மக்கள் போராட்டத்தை பார்த்திருப்பார்கள் மக்களின் உணர்வுகளை அறிந்திருப்பார்கள்.

தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக இராணுவத்தின் அணுசரணையுடன் கட்டப்பட்ட தையிட்டி விகாரைக் காணி மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் .

மக்கள் தமது கொள்கையில் உறுதியாக இருக்கிறார்கள் மக்களின் காணிகள் மக்களுக்கே வேண்டும் மாற்றுக் காணிகளை ஏற்க மாட்டோம்.

ஆகவே சட்ட விரோதமாக கட்டப்பட்ட தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டும் பதவிகளுக்காக தமிழ் மக்களை காட்டி கொடுப்பதை அரசின் முகவர்கள் நிறுத்த வேண்டுமென கட்சியி;ன் ஆதரவாளர்களும் அங்கு கூடிய பொது மக்களும் தெரிவித்தனர்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments