Sunday, March 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று திங்கட்கிழமை (16) மாலை 04.00 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை (17) மாலை 04.00 மணி வரை இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பின்வருமாறு ;

கொழும்பு – பாதுக்கை பிரதேச செயலகப் பிரிவு
களுத்துறை – மத்துகம, அகலவத்தை, வலல்லாவிட்ட, பாலின்தநுவர மற்றும் புலத்சிங்கள உள்ளிட்ட பிரதேச செயலகப் பிரிவுகள்
கண்டி – மேல் கோரளை பிரதேச செயலகப் பிரிவு
நுவரெலியா – அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவு
கேகாலை – தெரணியகல, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட உள்ளிட்ட பிரதேச செயலகப் பிரிவுகள்
இரத்தினபுரி – குருவிட்ட , எஹெலியகொடை, பெல்மடுல்ல, எலபாத்த, கலவானை, நிவித்திகல, அயகம, இரத்தினபுரி உள்ளிட்ட பிரதேச செயலகப் பிரிவுகள்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments