Thursday, September 24, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ஆசிய குத்துச்சண்டை போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய பர்வீன் ஹூடா

ஆசிய குத்துச்சண்டை போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய பர்வீன் ஹூடா

இந்தியாவின் பர்வீன் ஹூடா, பெண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் ஒரு குத்துகூட வீச வேண்டிய அவசியமின்றி காலிறுதிக்கு முன்னேறினார்.

தஜிகிஸ்தானின் மாலிகா நோசிமோவா போட்டியில் இருந்து விலகியதால், பர்வீனுக்கு ‘வாக் ஓவர்’ வழங்கப்பட்டது.

இதேவேளை, இந்தியாவின் சாக்ஷி சௌதரியின் ஆசிய விளையாட்டுப் போட்டி பயணம் 16-வது சுற்றில் முடிவுக்கு வந்தது.

பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவு போட்டியில், கஜகஸ்தானின் நடப்பு உலக சாம்பியனான அலுவா பால்கிபெகோவாவிடம் சாக்ஷி 3-2 என்ற வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இதற்கு முன்பு, சாக்ஷி தனது முதல் போட்டியில் பிலிப்பைன்ஸின் ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனையான ஐரா விலேகாஸை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தனது போட்டிப் பயணத்தைத் தொடங்கியிருந்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments