இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ஆஸ்திரேலிய இளம் வேகப்பந்து வீச்சாளர் மாலி பேர்ட்மேன் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
தனது அறிமுகப் போட்டியிலேயே சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வரிசையை நிலைகுலையச் செய்தார்.
இதன்படி, மாலி பேர்ட்மேனின் அபாரமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய இங்கிலாந்து அணி, இப்போட்டியில் 131 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
அறிமுகப் போட்டியிலேயே 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மாலி பேர்ட்மேனின் இந்தச் சாதனை கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


