Monday, September 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்ற உணவகத்திற்கு ரூ. 5 இலட்சம் அபராதம்

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்ற உணவகத்திற்கு ரூ. 5 இலட்சம் அபராதம்

500 மி.லீ. குடிநீர் போத்தலை ரூ. 100 க்கு விற்ற ஹோமாகமவில் உள்ள பிரபல உணவகத்திற்கு ஐந்து இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்றமை தொடர்பில், ஹோமாகம, கலவிலவத்தை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு எதிராக  நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகளால் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

 

2025.12.11 அன்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அப்போது நடைமுறையில் இருந்த இலக்கம் 2430/15 விசேட வர்த்தமானி அறிவித்தலின் கட்டளை எண் 93 இன் பிரகாரம் 500 மில்லிமீற்றர் உள்நாட்டில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் போத்தலுக்கான அதிகபட்ச சில்லறை விலை ரூ. 70 ஆக இருந்தபோதிலும், அந்த நீர் போத்தல் ரூ. 100 க்கு விற்கப்பட்டது தெரியவந்துள்ளது.

 

இந்த வழக்கு கடந்த (10) ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட பிரதிவாதி நிறுவனத்திற்கு நீதிமன்றம் ரூ. 500,000 அபராதம் விதித்தது.

 

இந்தச் சோதனை 2025 டிசம்பரில் நடைமுறையில் இருந்த அதிகபட்ச சில்லறை விலையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகும்.
2026 ஜூன் 10 நாளிடப்பட்ட இலக்கம் 2492/29 விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட கட்டளை எண் 96 இன் பிரகாரம், தற்போது உள்நாட்டில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான  நடைமுறையில் உள்ள அதிகபட்ச சில்லறை விலைகள்:
  • 500 மி.லீ. – 999 மி.லீ. வரை, ரூ. 80.00
  • 1லீற்றர் – 1.499 லீற்றர் வரை, ரூ. 120.00
  • 1.5 லீற்றர் – 1.999 லீற்றர் வரை, ரூ. 150.00
  • 2 லீற்றர் – 2.499 லீற்றர் வரை, ரூ. 180.00
  • 5 லீற்றர் – 6.999 லீற்றர் வரை, ரூ. 400.00
இதற்கிடையில், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடகூடிய விலைக்கு குடிநீர் போத்தல்கள் அல்லது பிற பொருட்களை விற்கும் வர்த்தக நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் இருந்தால், அலுவலக நேரங்களில் 1977 குறுகிய அழைப்பு எண் மூலம் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments