ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு காரணமாக போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
மலையகப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, ஹட்டன் – குயில்வத்தை பகுதியில் பிரதான வீதியில் திடீரென மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீதியை மீண்டும் போக்குவரத்துக்கு திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், அவதானமாக பயணிக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


