ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் சங்கம் கொழும்பு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (05) பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் கொழும்பு, விகாரமகாதேவி பூங்காவிலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குப் பேரணியாகச் சென்றுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர் சங்கங்களை ஒடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு செயற்திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடையை நீக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.