Sunday, June 7, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்விராட் கோலி சதம்; கொல்கத்தாவை வீழ்த்தி மீண்டும் முதலிடத்துக்கு வந்த பெங்களூரு!

விராட் கோலி சதம்; கொல்கத்தாவை வீழ்த்தி மீண்டும் முதலிடத்துக்கு வந்த பெங்களூரு!

ராய்ப்பூரில் நேற்றிரவு (14) நடந்த இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிராக தங்களின் மிக முழுமையான ஆட்டங்களில் ஒன்றை வெளிப்படுத்தி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்னிங்ஸில் விராட் கோலி தனது சிறப்பான சதத்தை அடித்து, 60 பந்துகளில் 105 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த துடுப்பாட்டம் 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் RCB அணியை வெற்றி பெற வழிவகுத்ததுடன், டி20 கிரிக்கெட்டில் 14,000 ஓட்டங்களை எட்டிய முதல் இந்திய துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

அத்துடன், இந்த வெற்றியுடன் RCB அணியானது நடப்பு ஐ.பி.எல். புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது.

ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமாகவிருந்த இந்தப் போட்டியானது மழையால் பாதிக்கப்பட்டமையினால் 75 நிமிட தாமதத்திற்குப் பின்னர் தொடங்கியது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய KKR அணி அங்கரிஷ் ரகுவன்ஷி மற்றும் ரிங்கு சிங் ஆகியோரின் அரைசதங்களுடன் நான்கு விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்களை எடுத்தது.

பின்னர், 193 ஓட்டங்களை துரத்திய RCB  அணி, ஆட்டத்தை நிதானமாகத் தொடங்கியது.

ஆனால் இரண்டாவது ஓவரில் கோலி தனது ஆட்ட வேகத்தை அதிகரித்து, வைபவ் அரோராவின் தளர்வான பந்துகளை பவுண்டரிகளை சரமாரியாக விளாசித் தண்டித்தார்.

அறிமுக வீரர் ஜேக்கப் பெத்தேலும் அதிரடியாக ஆடினார், எனினும் அவர் 15 ஓட்டங்களுடன் கார்த்திக் தியாகியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இரண்டாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 39 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்திற்கு மேலும் உத்வேகம் அளிக்க, இந்த ஜோடி இணைந்து 92 ஓட்டங்களுடன் ஒரு முக்கியமான இணைப்பாட்டத்தை அமைத்தது.

இதனிடையே, கோலி வெறும் 32 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டியதோடு, பின்னர் தனது நேர்த்தியான துடுப்பாட்டத்தின் மூலம் இன்னிங்ஸுக்கு மேலும் வேகமெடுத்தார்.

அதையடுத்து தியாகி படிக்கலை 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கச் செய்தார், அடுத்து வந்த அணித் தலைவர் ரஜத் பாடிதார் 11 ஓட்டங்களுடனும், டிம் டேவிட் 2 ஓட்டங்களுடனும் விரைவாக ஆட்டமிழந்து வெளியேறினார்.

இவர்களின் அடுத்தடுத்த ஆட்டமிழப்புகள் இருந்த போதிலும் சேஸிங் முழுவதும் RCB அணியை கோலி உறுதியான கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

மொத்தமாக 60 பந்துகளை எதிர்கொண்ட அவர் 11 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 175 ஸ்டிரைக் ரேட்டில் ஒரு பிரமிக்க வைக்கும் சதத்தை அடித்து, ஐந்து பந்துகள் மீதமிருந்த நிலையில் RCB  வெற்றியை உறுதி செய்ய உதவினார்.

போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவானார்.

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments