Tuesday, March 10, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்விசேட அதிரடிப்படையினரால் நாகர்கோவில் பகுதியில் கேரள கஞ்சா மீட்பு!

விசேட அதிரடிப்படையினரால் நாகர்கோவில் பகுதியில் கேரள கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இன்று அதிகாலை கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவ புலனாய்வு பிரிவுடன் இணைந்து விசேட அதிரடிப்படையினரால் நாகர்கோவில் பகுதியில் ஒன்பது பார்சல் அடங்கிய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் அதனுடன் 25 சிறிய பைகளில் அடையாளம் காணப்படாத போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்

சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது

கைப்பற்றப்பட்ட போதை பொருள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments