டச்சு பிரதமர் ரொப் ஜெட்டன் (Rob Jetten) மற்றும் அவரது துணைவரான அர்ஜென்டீனாவின் ஹாக்கி விளையாட்டு வீரர் நிக்கோலஸ் கீனன் (Nicolás Keenan) ஆகிய இருவரும் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
“மிகவும் சிறப்பான ஒருவர் உலகிற்கு வரவுள்ளார் 2027-இல் சந்திப்போம்” என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் இணைந்து பதிவிட்டுள்ளனர்.
தங்களின் பெற்றோர் கனவை நனவாக்க உதவிய கருமுட்டை நன்கொடையாளர், வாடகைத் தாய் லிசா (Lisa) மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு இருவரும் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
வணிகரீதியிலான வாடகைத் தாய் முறை மூலம் அல்லாமல், தங்களின் நண்பர்களான தம்பதியரின் உதவியுடனேயே இந்த வாய்ப்புச் சாத்தியமானதாக D66 கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1987-இல் பிறந்த ரொப் ஜெட்டன், காலநிலை மற்றும் எரிசக்தி அமைச்சராகப் பணியாற்றியவர்.
இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிக்கோலஸ் கீனனைச் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.
சொந்த நாட்டு நண்பர்களின் உதவியுடன் தந்தை ஆகவுள்ள டச்சுப் பிரதமருக்குப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


