அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, இம்முறை வாக்காளர் பங்கேற்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான Elections Alberta வாக்கெடுப்பை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
Alberta மாகாணம் கனடாவுடன் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுமா? என்பது தொடர்பான வாக்கெடுப்பு October 19 ஆந்திகதி நடைபெறவுள்ளது. சுமார் 4.5 கோடி வாக்குச் சீட்டுகள் இத்தேர்தலுக்காக அச்சிட வேண்டியுள்ளதுடன் குறைந்தது 60,000 பேர் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தேர்தல் முடிவுகள் October 20ஆம் திகதி அதிகாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த வாக்கெடுப்பில் சுமார் 85 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், முன்னெப்போதும் இல்லாத அளவிலான வாக்காளர் பங்கேற்பை எதிர்கொள்ளத் தயாராகி வருவதாக Elections Alberta தெரிவித்துள்ளது.
இதன் மூலம், கனடாவுடன் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுமா என்பது குறித்த வாக்கெடுப்பில் Alberta மாகாண மக்கள் கணிசமான ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது. இருப்பினும், அதிகமானோர் வாக்களிப்பது மட்டும் அவர்கள் கனடாவுடன் தொடர விரும்புகிறார்களா அல்லது பிரிந்து செல்ல விரும்புகிறார்களா என்பதைத் தீர்மானிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.


