நுவரெலியா மாவட்டம் நு/சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் எவர் கிரீன் கிட்ஸ் ஸ்கூல், அதிபர் திருமதி ஆறுமுகம் அன்னமேரி தலைமையில் வருடார்ந்த பரிசளிப்பு விழா இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீபாத கல்வியல் கல்லூரியின் உப பீடாதிபதி A.மெத்தேயூ அவர்கள் கலந்துக் கொண்டதோடு, அதிதிகளாக S.சேகர்(SLTES-111)PDCT நுவரெலியா,திருமதி K.சந்திரமதி ( பணிப்பாளர் social welfare manram) விசேட விருந்தினர்களாக பா.பாலேந்திரன் (சமாதான நீதிவான்)
முன்னாள் அதிபர் ஆறுமுகம், கே.பிரதீபன் (social welfare manram) A.கதாதரன்(DFCC bank)
அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
11 மாணவர்களின் பட்டமளிப்பு விழாவோடு ,பாடசாலையில் இருந்து தரம் ஒன்றுக்கு சென்று சிறந்த பெறுபேறுகள் சாதனைகளை படைத்த மாணவர்களையும் கௌரவித்தளுடன் மாணவர்களின் கண் கவர் கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக இடம்பெற்றது



