Friday, October 23, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வடக்கு, கிழக்கு, மலையக எம்.பிகளை சந்தித்த சஜித்

வடக்கு, கிழக்கு, மலையக எம்.பிகளை சந்தித்த சஜித்

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (22) இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

நாட்டில் தற்சமயம் நிலவும் பொருளாதார நிலைமையால் இப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் முகங்கொடுக்கும் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து விபரங்கள் கேட்டறியப்பட்டன.

குறிப்பாக, தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக மக்களின் வருமான மட்டம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் வடக்கு, கிழக்கு மற்றும் தோட்டப் பகுதிகளில் வாழும் மக்களினது குடும்ப பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டன.

வடக்கு, கிழக்கு மற்றும் தோட்டப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்குக் காணப்படும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளின் குறைபாடுகள் போலவே, சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகளில் இம்மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இச்சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டன.

தரமான சுகாதார சேவைகளுக்கான பிரவேசம், பாடசாலைக் கல்வியில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் குழந்தைகளின் போசாக்கு நிலைமை தொடர்பாகவும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களான வீ. இராதாகிருஷ்ணன், ஞானமுத்து ஸ்ரீநேசன், எம். எஸ். உதுமா லெப்பே, பத்மநாதன் சத்தியலிங்கம், முஜிபுர் ரஹ்மான், கவீந்திரன் கோடீஸ்வரன், காதர் மஸ்தான் மற்றும் ஹபீப் ரிபான் ஆகியோர் இன்றைய இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments