மொனராகலை மாவட்டம், தனமல்வில – உடவளவ வீதியின் போடகம பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அதிவேகமாக பயணித்த லொறியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருமே பலத்த காயங்களுக்குள்ளாகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் இருவரும் தனமல்வில பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்தை அடுத்து லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்துக்கான காரணம் குறித்து தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


