வங்கதேசத்தைச் சேர்ந்த நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பஷீர் மற்றும் சிதி அக்தர் ஆகியோர் புனிதப் பள்ளிவாசலுக்குள் அந்தச் செயலில் ஈடுபட்டதாக சவூதி அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
மரண தண்டனை தொடர்பாக வங்கதேசம் விளக்கம் கோரல்
2026ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி மெக்காவில் இருவருக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவூதி அரசு தெரிவித்துள்ளது. ஆனால், அவர்கள் செய்ததாகக் கூறப்படும் ஒழுக்கக்கேடான செயல் என்னவென்பதை சவூதி அரசு குறிப்பிடவில்லை.
மரண தண்டனை குறித்து வங்கதேசத்துக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்ததாக சவூதி அரேபியா கூறுகிறது. இதை மறுத்துள்ள வங்கதேச அரசு, தங்களுக்கு முன்கூட்டியே தகவல் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது. மேலும், வழக்கு தொடர்பான தரவுகளை சவூதி அதிகாரிகளிடம் கேட்டுள்ளது.


