நயன்தாரா முதன்மை அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய ஆன்மீகத் திரைப்படமான ‘வேர்ல்ட் ஆஃப் மகாசக்தி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ காணொளி வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், டாக்டர் ஐசரி கே. கணேஷ் வழங்கும் இத்திரைப்படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்குகிறார். அதிநவீன கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான பின்னணியுடன் இப்படம் உருவாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் நயன்தாராவுடன் துனியா விஜய், ரெஜினா கசான்ட்ரா, ஊர்வசி, யோகி பாபு, மைனா நந்தினி, கருடா ராம் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். ஆன்மீகக் கதைக்களத்தையும் பிரம்மாண்டமான காட்சியமைப்புகளையும் இணைத்து உருவாகும் இத்திரைப்படம் குறித்த அறிவிப்புகள் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன.


