Wednesday, October 21, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்முல்லைத்தீவு, கிளிநொச்சியில் தனியான நீர்வழங்கல் அலுவலகங்கள் நிறுவத் திட்டம்!

முல்லைத்தீவு, கிளிநொச்சியில் தனியான நீர்வழங்கல் அலுவலகங்கள் நிறுவத் திட்டம்!

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தனியான பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் இல்லாததால், மக்கள் 100 கிலோமீற்றருக்கும் அதிக தூரம் பயணித்து யாழ்ப்பாணத்திற்குச் சென்று சேவைகளைப் பெற வேண்டிய நிலை காணப்படுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த இரு மாவட்டங்களிலும் தனியான பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்களை விரைவாக அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (21) பாராளுமன்றக் குழு அறையில் நடைபெற்ற வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நீர் வழங்கல் தொடர்பான முறைப்பாடுகளுக்குத் தீர்வு காணுதல், மாதாந்த கட்டணப் பட்டியல்களைச் சீரமைத்தல், நீர்ப் பரிசோதனை, ஆய்வுகூட வசதிகள் மற்றும் நிதி நடவடிக்கைகளுக்கான காசாளர் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக மக்கள் யாழ்ப்பாணத்திற்குச் செல்ல வேண்டியுள்ளதாக ரவிகரன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கோரிக்கை தொடர்பில் ஏற்கனவே கடந்த ஜனவரி 2ஆம் திகதி அமைச்சருக்குக் கடிதம் அனுப்பியிருந்ததாகவும், பின்னர் பாராளுமன்றத்திலும் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகள், 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு தனித்தனியான பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments