மாதம்பே – குளியாப்பிட்டிய வீதியில் இன்று (28) அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களது தாய் படுகாயமடைந்துள்ளார்.
அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகிச் சென்று மின்விளக்குக் கம்பத்தில் மோதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் தும்மலசூரிய, வீரகொடியன பகுதியைச் சேர்ந்த 17 மற்றும் 11 வயதுடைய இரு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த அவர்களது தாய் சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பில் மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


