Sunday, June 7, 2026
spot_img
Homeஉலக செய்திகள்பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே கருத்து வேறுபாடு!

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே கருத்து வேறுபாடு!

இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பின் துணை வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் விசேட தூதுவர்களின் சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது.

டெல்லியில் நடந்த இந்த கூட்டத்தில் பிராந்தியத்தில் நடைபெறும் மோதல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதில் ஈரான் மீதான போர் தொடர்பாக நடந்த விவாதத்தில் உறுப்பு நாடுகளிடம் கருத்து வேறுபாடு நிலவியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் ஏகமனதாக ஒரு தீர்மானம் எட்டப்படாமல் இந்தக் கூட்டம் முடிவடைந்துள்ளது.

குறிப்பாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் நிலைப்பாடு காரணமாக கூட்டறிக்கை வெளியிடப்படாமல் போனதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில்,ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா, எகிப்து,எத்தியோப்பியா,ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இந்தோனேசியா ஆகிய 11 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments