Sunday, August 16, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பிகினி ஆடையில் இலங்கையின் பிரபல பெண்கள் பாடசாலை ஆசிரியை

பிகினி ஆடையில் இலங்கையின் பிரபல பெண்கள் பாடசாலை ஆசிரியை

பிகினி ஆடையில் இலங்கையின் பிரபல பெண்கள் பாடசாலை ஆசிரியை; சமூகவலைத்தள சர்ச்சைக்கு முடிவு!

பிகினி ஆடையில் இலங்கையின் பிரபல பெண்கள் பாடசாலை ஆசிரியை தொன்றியதாக சமூகவலைத்தளங்களில் பரவிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட்டுள்ளது.

 

அதாவது பிகினி ஆடையில் தோன்றியவர் சமூகவலைத்தளங்களில் வெளியானது போல இலங்கை பெண்ணோ அல்லது இலங்கை ஆசிரியையோ அல்ல என்றும், அவர் அமெரிக்காவை சேர்ந்த பெண் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது

பிகினி ஆடையில் இலங்கையின் பிரபல பெண்கள் பாடசாலை ஆசிரியை

இலங்கையின் முன்னணி பெண்கள் பாடசாலை ஒன்றில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியை ஒருவர் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அழகிப் போட்டியில் பிகினி அணிந்து பங்கேற்றதாகவும், அதையடுத்து அதே பாடசாலையின் ஒரு குழு அதிபரிடம் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கோரியதாகவும் கூறும் செய்தி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

ஆசிரியர் தொழிலுக்கு இவ்வாறான நடத்தை பொருத்தமற்றது எனக் கூறி பலரும் அந்தப் பதிவுகளைப் பகிர்ந்ததுடன், பல்வேறு கருத்துக்களையும் வெளியிட்டனர். அது தொடர்பில் மெற்கொள்ளப்பட்ட உண்மைச் சரி பார்ப்பில், இந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

புகைப்படங்களில் இடம்பெற்றுள்ள பெண் ர் மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவைச் சேர்ந்த ஜெய்மே ஸ்டெஃபனி (Jeyme Stefany) ஆவார். அவர் குவாத்தமாலாவில் நடைபெற்ற “Monja Blanca” அழகிப் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது

.எந்தவித ஆதாரச் சரிபார்ப்பும் இன்றி, உள்ளூர் சமூக ஊடகப் பக்கங்கள் பலவும், இந்தத் தவறான தகவலைப் பகிர்ந்துள்ளனர். அத்துடன் இந்தப் போலிச் செய்தியை உண்மையென நம்பி அதனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments