Wednesday, September 2, 2026
spot_img
Homeஉலக செய்திகள்நேபாள வெள்ளம் - உயிரிழப்பு 1,127 ஆக உயர்வு

நேபாள வெள்ளம் – உயிரிழப்பு 1,127 ஆக உயர்வு

நேபாளத்தின் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,127 ஆக உயர்ந்துள்ளது.

நேபாளத்தின் பல மாவட்டங்களிலும் அண்டை நாடான இந்தியாவிலும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரசுவாவில் 45, நுவாகோட்டில் 155, தாடிங்கில் 59, சிட்வானில் 348, கோர்காவில் 66, தனாஹுனில் 38, நவல்பாசி கிழக்கில் 217, நவல்பாசி மேற்கில் 190 மற்றும் இந்தியாவில் 9 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதுவரை 1,113 சடலங்களுக்கு பிரேதப் பரிசோதனை மற்றும் அடையாளம் காணும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதுடன், 95 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும், காணாமல் போனவர்களின் உறவினர்கள் அடையாளம் காண உதவும் வகையில், அடையாளம் தெரியாத 911 சடலங்களின் விவரங்கள் பொலிஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 7,912 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 6,541 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 4,858 பேரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.

பனிப்பாறை சரிவினால் ஏற்பட்ட இந்த வெள்ளம், போட்டேகோஷி ஆற்றங்கரையில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளதுடன், குடியிருப்புகள், வீதிகள், எல்லை வர்த்தக நிலையங்கள் மற்றும் நீர்மின்சக்தி கட்டமைப்புகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments