Tuesday, September 1, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நாளை முதல் ஆரம்பம் - பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு

நாளை முதல் ஆரம்பம் – பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு

2027 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி உரிமங்களை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் நாளை (01) முதல் ஆரம்பமாகும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

துப்பாக்கி உரிமங்களைக் கொண்டுள்ள அனைத்து தனிநபர்களும் நிறுவனங்களும் 2026 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் தங்களது உரிமங்களைப் புதுப்பிப்பது கட்டாயமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செல்லுபடியாகும் உரிமம் இன்றி துப்பாக்கியை வைத்திருப்பது, துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் 22வது பிரிவின் விதிகளுக்கு அமைய குற்றமாகும் என அமைச்சு எச்சரித்துள்ளது.

எனவே, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உரிமங்களைப் புதுப்பிக்கத் தவறும் துப்பாக்கி உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 2026.09.01 முதல் 2026.12.31 வரை இடைப்பட்ட காலப்பகுதியில் பதிவுகளைப் புதுப்பிக்கத் தவறுகின்ற தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களுக்குத் தாமதக் கட்டணம் விதிக்கப்படும் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காகக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்னர் உரிய புதுப்பித்தல்களை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடமும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments