Thursday, November 21, 2024
spot_img
Homeஇந்தியா செய்திகள்தேர்தல் பிரசாரங்களை தொடங்குங்கள்: முதல்வர் ஸ்டாலின்

தேர்தல் பிரசாரங்களை தொடங்குங்கள்: முதல்வர் ஸ்டாலின்

இன்றுமுதல் தேர்தல் பிரசாரங்களை தொடங்குங்கள், துண்டுப் பிரசுரங்கள், திண்ணைப் பிரசாரங்கள் என மக்கள் இயக்கத்தை தொண்டர்கள் அனைவரும் தொடங்க வேண்டும் என திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை (நவ.20) திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சி பணிகள், பேரவைத் தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் திமுக பொதுக்குழு கூட்டம் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியானது.

கூட்டத்தில் இன்று முதல் தேர்தல் பிரசாரங்களை தொடங்குங்கள் தேர்தல் பிரசாரங்களை தொடங்க வேண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை உயர்த்தவும், அகில இந்தியா முழுமைக்கும் கூட்டாட்சி அரசை மலர வைக்கவும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் பவள விழாவைக் கண்டு கம்பீரமாக வளர்ந்து வருகிறது. ஐந்து முறை தமிழ்நாட்டை ஆண்ட கழகத்துக்கு ஆறாவது முறையாக ஆட்சி செய்யும் வாய்ப்பைத் தமிழ்நாட்டு மக்கள் வழங்கினார்கள்.

தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியும், சொல்லாத பல திட்டங்களை நிறைவேற்றியும் வளமான தமிழ்நாட்டைக் கழக அரசு உருவாக்கி வருகிறது. இனி எந்நாளும் திமுக தான் தமிழ்நாட்டை ஆளும், ஆளவேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கையுடன் சொல்லி வருகிறார்கள். பயனடைந்தவர் சொல்லும் பாராட்டும், பயனாளிகளின் மனநிறைவும் சேர்ந்து 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியை மீண்டும் மலர வைக்கும் என்பதில் அய்யமில்லை.

இந்நிலையில் கழக அரசின் சாதனைகள் – திட்டங்கள் – முதல்வரின் அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடுகள், தொலைநோக்குப் பார்வைகள் அனைத்தையும் மக்களுக்கு நினைவூட்டுவதன் மூலமாகத் தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்குங்கள் என்று கழக உடன்பிறப்புகள் அனைவரையும் இந்த உயர்நிலைச் செயல்திட்டக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.

திமுக தொண்டர்கள் ஒவ்வொருவரும், ஒரு இயக்கம் என்று சொல்லத்தக்க வகையில் இன்று முதல் தேர்தல் பரப்புரைப் பணிகளைத் தொடங்குங்கள். துண்டுப் பிரசுரங்கள் – திண்ணைப் பிரச்சாரங்கள் என மக்கள் இயக்கத்தைத் தொண்டர்கள் அனைவரும் தொடங்குங்கள். ஏழாவது முறையும் ஏற்றம் காண்போம் என்று கோடிக்கணக்கான தொண்டர்களது உள்ளத்துக்கு அன்பான வேண்டுகோளை வைத்துள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments