டுபாயில் கைது செய்யப்பட்ட, பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் என குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷிரான் பாசிக் என்பவர் இன்று (14) நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளார்.
இவர் கடந்த மே மாதம் 26 ஆம் திகதி டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
ஈரானிய போதைப்பொருள் வலையமைப்புடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டிருந்தமையால் இவர் அமெரிக்காவிற்கும் தேவையாகவுள்ள ஒரு நபர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இவர் டுபாயில் பெரும் கோடீஸ்வரராக தலைமறைவாகியிருந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கைக்கு போதைப்பொருளை விநியோகிக்கும் 5 பெரு அளவிலான கடத்தல்காரர்களில் ஒருவராக ஷிரான் பாசிக் கருதப்படுகிறார்.
குறித்த சந்தேகநபரை நாட்டின் பாதுகாப்புப் படையினரின் பொறுப்பில் எடுத்து மேலதிக விசாரணைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


