Thursday, November 21, 2024
spot_img
Homeசினிமா செய்திகள்டாக்ஸிக் படக்குழு மீது வழக்குப் பதிவு!

டாக்ஸிக் படக்குழு மீது வழக்குப் பதிவு!

கர்நாடக வனத்துறையினர் டாக்ஸிக் படக்குழுவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேஜிஎஃப், கேஜிஎஃப் – 2 படங்களில் நடித்து இந்திய சினிமாவில் ஸ்டாரானவர் நடிகர் யஷ். உலகளவில் கவனம் ஈர்த்த இப்படம் ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

தொடர்ந்து, யஷ் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் தன் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

டாக்ஸிக் (Toxic) எனப் பெயரிட்டுள்ள இப்படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

கர்நாடக சுற்றுலாத் துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே பீன்யாவில் ஆய்வு செய்தபோது காட்டில் மரங்கள் அகற்றப்பட்டுள்ளது சாட்டிலைட் படங்கள் மூலம் உறுதிசெய்தார்.

இந்த வழக்குப் பதிவு கனரா வங்கி மேலாளர், ஹிந்துஸ்தான் மெசின் டூல் மேலாளர் மீது பதியப்பட்டுள்ளது.

“டாக்சிக் படப்பிடிப்பு நடத்தப்பட்ட இடத்துக்கு சென்றேன். 100க்கும் மேற்பட்ட மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டிருந்தன. இந்த இடம் ஹிந்துஸ்தான் மெசின் டூல் இடத்தில் நடைபெற்றுள்ளது. இது சாட்டிலைட் படங்கள் மூலம் தெளிவாகியுள்ளது. அனுமதி பெறாமல் மரங்களை வெட்டுவது சட்டப்படி குற்றம்” என அமைச்சர் ஈஸ்வர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் கீது மோகன்தாஸ் லையர்ஸ் டைஸ் படம் 2 தேசிய விருதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீது, தமிழில் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில் டின்னு என்கிற குழந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா நடிப்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments