Saturday, October 24, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்சென்னையில் பரபரப்பு

சென்னையில் பரபரப்பு

சென்னை அம்பத்தூர் பகுதியில், பிரேக்குக்குப் பதிலாகத் தவறுதலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார், மூன்று இருசக்கர வாகனங்கள் மற்றும் காவல் உதவி மையத்தின் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர் பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (50) என்பவர், தனது சொகுசு காரில் வீட்டிலிருந்து கள்ளிக்குப்பம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

இதன்போது, போக்குவரத்துச் சிக்னல் பகுதியில் காரை நிறுத்துவதற்காகப் பிரேக்கை அழுத்துவதற்குப் பதிலாகத் தவறுதலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் சென்ற மூன்று இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியதுடன், புதூர் காவல் உதவி மையத்தின் மீதும் மோதி நின்றது.

பலர் காயம்; பொலிஸார் விசாரணை

இந்த விபத்தில் இருசக்கர வாகனங்களில் பயணித்தவர்கள் காயமடைந்துள்ளனர். விபத்து தொடர்பில் போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விபத்து இடம்பெற்ற இடத்திற்கு அருகிலேயே மின்சார மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அமைந்துள்ளது. எனினும், கார் சிக்னல் தடுப்பில் மோதி நின்றதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments