கிங் கங்கையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக, அப்பகுதியை ஒட்டிய தாழ்நிலப் பிரதேசங்களில் சிறு வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார எச்சரித்துள்ளார்.
தெனியாய, தெல்லவ, தவலம, ஹினிதும மற்றும் பத்தேகம ஆகிய பகுதிகளில் 100 மி.மீ முதல் 150 மி.மீ வரை அதிக மழை பதிவாகியுள்ளது. ஏனைய பெரும்பாலான பகுதிகளில் சாதாரண மழை பெய்துள்ளது.
தவலம, ஹினிதும, நாகொட, பத்தேகம மற்றும் திவதுர உள்ளிட்ட கிங் கங்கையை ஒட்டிய தாழ்நிலப் பகுதி மக்கள்.
இதுவரை பெய்துள்ள தொடர் மழை காரணமாக இந்த வெள்ள அபாயம் உருவாகியுள்ளது. எனினும், எதிர்வரும் மணித்தியாலங்களில் மேலும் அதிக மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளதாக வானிலை எதிர்வுகூறல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், தாழ்நிலப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லத் தயாராக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.


