கியூபெக் பிரேத பரிசோதகர் அலுவலகம், மருத்துவமனைகளில் செய்யப்பட வேண்டிய 14 முக்கிய சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கியூபெக் மாகாணம், கட்வினோ (Gatineau) நகரில் கடுமையான ஆஸ்துமா தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த நான்கு வயதுச் சிறுமி க்ளோ பெலாஞ்சர் (Chloé Bélanger) மரணம் குறித்து ஆராய்ந்த பின்னரே, இந்த அறிக்கையை பிரேத பரிசோதகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம், கட்வினோ மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுமி க்ளோ பெலாஞ்சர், அங்கு நீண்ட நேரம் உரிய கவனிப்பின்றி விடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் அவர் இதய மற்றும் சுவாசச் செயலிழப்புக்கு உள்ளாகி, ஒட்டாவா நகரில் உள்ள சி.எச்.இ.ஓ (CHEO) மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், பிரேத பரிசோதகர் அலுவலகத்தின் அறிக்கையானது, பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது முதல் ஒட்டாவா மருத்துவமனைக்கு மாற்றப்படுவது வரை, நிகழ்ந்த சுமார் எட்டு மணி நேர நிகழ்வுகளை விரிவாக ஆராய்ந்துள்ளது.
அத்துடன், இப்பகுதி சுகாதார அதிகார சபையான ‘சாந்தே கியூபெக் ஒடாவா’ (Santé Québec Outaouais – SQO) மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 14 மாற்றங்களையும் இப்பரிந்துரை சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத் தக்கது.


