Thursday, September 3, 2026
spot_img
Homeஉலக செய்திகள்காசாவில் இருந்து பின்வாங்க முடியாது – நெதன்யாகு விடுத்த எச்சரிக்கை!

காசாவில் இருந்து பின்வாங்க முடியாது – நெதன்யாகு விடுத்த எச்சரிக்கை!

காசாப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள “மஞ்சள் கோடு” எல்லைக் கோட்டிலிருந்து இஸ்ரேலியப் படைகள் ஒருபோதும் பின்வாங்காது என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடியாக அறிவித்துள்ளார்.

காசாவிலுள்ள ராணுவ முகாம் ஒன்றிற்கு நேரடியாகச் சென்ற நெதன்யாகு, “நாங்கள் இந்தப் பகுதியை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம்; இந்த எல்லையிலேயே தொடர்ந்து நீடிப்போம்” என்று உறுதியளித்துள்ளார்.

ஒக்டோபர் 2025 இல் அமலுக்கு வந்த முதற்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேலிய ராணுவம் பின்வாங்கிய எல்லைக் கோடே இந்த “மஞ்சள் கோடு” என அழைக்கப்படுகிறது.

இஸ்ரேலிய ராணுவ வரைபடங்களின்படி, இந்த எல்லைக்கோடு காசாவின் கிழக்கு எல்லையிலிருந்து 1.5 கி.மீ முதல் 6.5 கி.மீ வரை ஊடுருவி, காசாவின் மொத்தப் பரப்பளவில் சுமார் 58 சதவீதத்தைக் கட்டுப்படுத்துகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments