Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி!

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி!

களுத்துறை, பள்ளிவாசல் வீதி, வெட்டுமகட பகுதியில் இன்று (28) காலை 8.59 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து, காரில் வந்த நபர் ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை தொடங்கியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments