Saturday, October 17, 2026
spot_img
HomeUncategorizedகனடாவைப் பிளவுபடுத்த முயற்சி

கனடாவைப் பிளவுபடுத்த முயற்சி

அமெரிக்கா தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் நோக்கில் கனடாவைப் பிளவுபடுத்த முயற்சிப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி எச்சரித்துள்ளார்.

கனடாவின் முக்கிய எண்ணெய் வளம் கொண்ட ஆல்பர்ட்டா மாகாணம், கனடாவுடன் தொடர்ந்து இணைந்திருப்பதா அல்லது பிரிவினை தொடர்பான வாக்கெடுப்புக்கான சட்ட நடைமுறையை ஆரம்பிப்பதா என்பதைத் தீர்மானிக்கும் வாக்கெடுப்பை எதிர்வரும் திங்கட்கிழமை நடத்தவுள்ளது.

ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடனேயே   இணைந்திருக்க வேண்டும்

 

இந்நிலையில், ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடனேயே தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என வலியுறுத்தி, கால்கரி நகரில் நடைபெற்ற கூட்டத்தில் மார்க் கார்னி கலந்துகொண்டார். அங்கு உரையாற்றிய பிரதமர் மார்க் கார்னி,

சர்வதேச பதற்றங்களும் பிளவுகளும் அதிகரித்துள்ள சூழலில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படுவது பொருத்தமற்றது எனக் குறிப்பிட்டார். கனடாவைப் பிளவுபடுத்தி அதன் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு நாட்டுக்கு வெளியிலுள்ள சக்திகள் முயற்சிப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

கனடாவுக்கு எதிராக வாக்களிப்பது, எதிர்காலத்தில் பல தலைமுறைகளுக்கு நிச்சயமற்ற நிலைமையையும் ஆழமான பிளவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்துடனான வர்த்தகப் பதற்றங்கள் மற்றும் கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக மாற்றுவது தொடர்பான ட்ரம்பின் கருத்துகள் ஆகியவற்றின் பின்னணியில், கனடாவின் தேசிய ஒற்றுமை குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது.

இதற்கிடையில், ஆல்பர்ட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித், கனடாவுடன் தொடர்ந்து இணைந்திருப்பதற்கு ஆதரவாகத் தனது வாக்கை முன்கூட்டியே அளித்துள்ளார்.

மாகாணத்தின் சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மாற்றங்கள் தேவைப்பட்டாலும், நாடு பிளவுபடாமல் இருப்பதே முக்கியம் என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிடத்தக்க வகையில், எதிர்வரும் வாக்கெடுப்பு ஆல்பர்ட்டா உடனடியாகப் பிரிந்து செல்வது குறித்ததல்ல. மாறாக, எதிர்காலத்தில் கனடாவிலிருந்து பிரிவது தொடர்பான வாக்கெடுப்பை நடத்துவதற்கான சட்ட நடைமுறையை ஆரம்பிக்க வேண்டுமா என்பதையே தீர்மானிக்கவுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments